Search This Blog

Monday, 23 July 2018

4.6 வைரமுத்துவின் கட்டுரை ('தமிழை ஆண்டாள்') - தமிழர்களின் இறைபக்தியின் தொன்மை அறியாமை


   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   





தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிடமுடியாது. இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.



இதிகாச புராணங்களும் வரலாற்று உண்மைகள்தான். அவற்றை மட்டும் பலரால் போகிற போக்கில் புறந்தள்ளிவிடமுடிகின்றது! ‘இதி ’ + ‘ஹாச’ - ‘இப்படி நிகழ்ந்தது’ என்று பொருள். ‘புராண’ - பண்டைய நாள்களில் நடந்தவை என்று பொருள்.

வெறும் நூற்றாண்டுகளைப் பற்றிப் பேசுகின்றார். முன்னோர்கள் காலத்தை வெறும் ஆண்டுகள், நூற்றாண்டுகள் என்பதோடு நின்றுவிடாமல் யுகங்கள், கல்பங்கள், மன்வந்திரங்கள் என்று பலவாகப் பிரித்தனர். ஒவ்வொரு யுகத்திலும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன!!

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாகவதத்திலும் திராவிட நாடு, சேரர், சோழர், பாண்டியர், திராவிடர்களின் பக்தி, திராவிட நாட்டில் உள்ள திருத்தலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன!! உதாரணம்: 'ஆதிமூலமே' என்றழைத்த கஜேந்திரன் என்ற யானை முற்பிறவியில் திராவிடதேசத்தில் இந்திரதியும்னன் என்ற உயர்ந்த பாண்டிய மன்னனாகப் பிறந்தவன்!! !! மேலும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள “யுகம் யுகமாகத் திகழும் தமிழகம்” என்ற கட்டுரையை வாசிக்க வேண்டுகின்றேன்.

பண்டைய யுகங்களிலேயே:

* 'திராவிட' என்பது வடமொழியில் உபயோகம் செய்யப்பட்ட ஒரு சொல்!

* வடமாநிலத்தவரும் பாராட்டும் வண்ணம் பக்திமான்கள் நிறைந்த நாடாகத் தமிழகம் ஒளி வீசியது

* தமிழகம் திராவிட நாட்டைச் சேர்ந்தது - சோழ, பாண்டிய, சேர நாடுகள் யுகம் யுகமாக இருந்து வருகின்றன

* நீர்வளமும் மற்றைய வளங்களும் நிறைந்த நாடாகத் தமிழகம் திகழ்ந்தது

அளவுகடந்த மொழிப்பற்றினால் நம்மில் சிலர் சில உண்மைகளைக் காணாமல் இருந்துவிடுகின்றனர். நம் நாட்டில் மொழிகளும் நம் முன்னோர்களின் மொழியறிவும் எத்தகையது என்று வைரமுத்து அவர்களைப் போன்றவர்கள் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும்!

இது தவிர:

1. ‘சங்ககாலத் தமிழர்களின் சமயம்’ என்ற நூலில் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி அய்யங்கார் சங்ககாலத்துத் தமிழர்களின் வாழ்வு எவ்வளவு தூரம் இறைவனோடு கலந்து இருந்தது என்று விளக்கியுள்ளார்.

2. "'தமிழை ஆண்டாள்' கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்" என்ற கட்டுரையில் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களும் வைரமுத்துவின் சறுக்கல் # 3 மற்றும் சறுக்கல் # 4 ஆகியவற்றில் பிழைகளைச் சுட்டிக்காட்டி உண்மைகளை வெளியிட்டுள்ளார்.




   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   


No comments:

Post a Comment