சனாதன தருமம் சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணப் பிரிவுகளில் அனைத்தையும் பாகுபடுத்துகின்றது.
சாத்வீகம் என்ற வகுப்பைச் சார்ந்தவை:
* கடமையுணர்வு
* நேர்மை
* வாய்மை
* கருணை
* திருப்தி
* இன்பங்கள் நுகர்வதில் நாட்டமின்மை
* (சாத்திரங்கள் தீய குணங்களாக எவற்றை விலக்கச் சொல்லிற்றோ அந்தத்) தீய குணங்களுக்கு அடிமை ஆகாமல் இருத்தல்
* இயற்கையான, ஆழமான இறைபக்தி
* நல்வினை தீவினைகள், மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றில் மாறாத முழு நம்பிக்கை
* பணிவு
* தீமையைக் கண்டால் இயற்கையான வெறுப்பு
* வள்ளல் தன்மை
* நேர்மையான சுயபரிசோதனை / தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல்
* உய்த்துணர்வு
* நன்றியுணர்வு
போன்ற குணங்கள்.
ராஜசம் என்ற வகுப்பைச் சார்ந்தவை:
* உலகியல் இன்பங்கள் நுகர்வத்தில் நாட்டம்
* உலகியல் முன்னேற்றங்களில் நாட்டம்
* இறுமாப்பு
* சமூக அந்தஸ்து / செல்வச் செழிப்பு ஆகியவற்றால் மற்றவர்கள் மீது ஒரு அலட்சிய மனோபாவம்
* பிடிவாதம்
* திருப்தியின்மை
* புகழில் விருப்பம்
* மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் தன்மை
* நகைச்சுவையில் நாட்டம் / நகைச்சுவை உணர்வு
* தன்னை வருத்திக்கொண்டு தவங்கள் புரிதல்
* போட்டி மனப்பான்மை
* தன் திறமைகளை வெளிப்படுத்த ஆவல்
* வேட்டையாடுதல் போன்றவற்றில் வீரம் காட்டுதல்
* மதம் கொண்ட நடை
போன்ற குணங்கள்.
தாமசம் என்ற வகுப்பைச் சார்ந்தவை:
* பொறுமையின்மை
* பொய்மை
* கருங்கல் போன்ற கொடிய இதயம்
* பேராசை
* சுயநலம் கருதி மற்றவரை முகத்துதி செய்தல் / அடிவருடுதல்
* கபடம்
* மற்றவர்களைக் கெடுத்தல்
* ஒற்றுமையின்மை
* கலகம்
* துக்கம்
* ஏமாற்றம் அடைதல்
* குறிக்கோளின்றி திரிதல்
* தீய பழக்கங்களுக்கு அடிமை ஆவது
* தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகள்
* கற்பனையான அச்சங்கள்
* சோம்பல்
* நாத்திகம்
போன்ற குணங்கள்.
குறிப்பு: எந்தப் பாகுபாடும் நமது உடல்நலனை மட்டும் அல்லது பொதுவான மனவிருப்பங்களை மட்டும் கணக்கில் கொண்டு அமைந்தவை அல்ல. இவை ஆன்ம நலனை கருத்தில் கொண்டு அமைந்தவை. இவற்றைக் கடைபிடித்தால் அதன் பயனாய் மனநலனும் உடல்நலனும் தாமே விளையும் என்பதும் நோக்கத்தக்கது.
பெரும்பாலும் நாம் அனைவரும் இந்த மூன்று குணங்களின் கலவைகளாகவே இருக்கின்றோம். அதிலும் சாத்வீக குணம் மற்ற இரண்டை விட குறைந்த அளவில் உள்ளது என்பது பொதுவான ஒரு உண்மை. விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு.
பரமபதம் என்ற திருநாட்டின் வெளியில் உள்ள நாம் இவ்வுலகில் 100% சாத்வீகம் காண்பது நடவாது. இங்கே உள்ளவர்களின் சாத்வீக குணம் கலப்படம் உள்ள சத்துவ குணம் (மிச்ர சத்துவம்) - திருநாட்டில் உள்ளவர்களின் சாத்வீக குணம் கலப்படமற்ற சத்துவ குணம் (சுத்த சத்துவம்).
சனாதன தருமத்தில் ஒரு விந்தை என்னவென்றால் இந்த சத்துவம்-ராஜசம்-தாமசம் என்ற பாகுபாட்டை மனிதர்களின் குணங்களோடு நிறுத்தவில்லை! வழிபாட்டு முறைகள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நிறங்கள், காலம் என்று பலவற்றிலும் இந்தப் பாகுபாடு உண்டு. சில எடுத்துக்காட்டுக்கள்:
* கிளி, அன்னம், புறா போன்றவை சாத்வீகமான பறவைகள்
* சிங்கம், புலி போன்றவை ராஜசமான விலங்குகள்
* வெங்காயம், பூண்டு போன்றவை தாமசமான தாவரங்கள்
No comments:
Post a Comment