ஸ்ரீவைணவத்தின் படி இந்தப் பிரபஞ்சம் நித்திய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.
நித்திய விபூதி:
• நம் புலன்களுக்கும் மற்றும் தொடக்கம் / முடிவு ஆகிய எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது
• அந்தமில் ஞானம் மற்றும் பேரின்பம் பெற்றுத் திகழும் பரமபதம்
• எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தேவிமார்களுடனும் அடியார்களுடனும் இங்கு வீற்றிருக்கின்றார்
லீலா விபூதி:
• நாம் வாழும் இவ்வுலகம் உள்பட பல கோடி உலகங்கள் (பிரம்மாண்டங்கள்) கொண்டது
• தொடக்கம்/ முடிவு ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டது
• சுவர்க்கம் நரகம் ஆகியவையும் இதில் அடக்கம்
ஜீவாத்மாக்கள் மூவகை – நித்தியர்கள், முக்தர்கள், பத்தர்கள்
வகை | விபூதி | விளக்கம் | உதாரணம் |
நித்தியர் | நித்திய | தொடக்கம் முடிவு எதுவும் இல்லாமல் அங்கேயே வசிப்பவர்கள் | ஸ்ரீமஹாலக்ஷ்மி, திருவனந்தாழ்வான், சக்கிரத்தாழ்வார் |
முக்தர் | நித்திய | ஜன்மங்கள் பல செய்து முடிவாக பிறப்பு இறப்பு சூழலைத் தகர்த்துப் பரமபதம் அடைந்து உய்ந்தவர்கள் | நம்மாழ்வார், நம்பாடுவான் |
பத்தர் | லீலா | பிறப்பு இறப்பு சூழலுக்குள் இருக்கும் கட்டுண்டவர்கள் | நம் போன்ற ஜீவாத்மாக்கள் |
இறைவன் பத்தர்களாக இருக்கும் நம்மை முக்தர்கள் ஆக்கவே விழைகின்றான்.
No comments:
Post a Comment