ஸ்ரீ இராமானுசருக்குப் பின் ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பட்டர், ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீ நம்பிள்ளை என்ற ஆசாரியர்கள் ஸ்ரீவைணவ குருபரம்பரையை அலங்கரிக்கின்றனர்.
ஸ்ரீ நம்பிள்ளையின் சீடரான ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றியதே ஸ்ரீவைணவ '6000 படி குருபரம்பரா பிரபாவம்' என்ற நூல்.
இந்த 6000 படி குருபரம்பரா பிரபாவம் நூலில் "கடபயாதி ஸங்க்யை" என்ற முறைப்படி ஸ்ரீ இராமானுசரின் அவதாரம் செய்த மற்றும் பரமபதம் சென்ற வருடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கடபயாதி ஸங்க்யையைப் பற்றி ஒரு அறிமுகம்: https://en.wikipedia.org/wiki/Katapayadi_system
6000 படி குருபரம்பரா பிரபாவம் நூலில் உள்ள குறிப்பு:
"அவர் அவதாரம் செய்த வருடம் 'தீர்லப்தா' (ஞானம் அடையப்பட்டது) என்ற பொருளிலும், பரமபதம் சென்ற வருடம் 'தர்மோநஷ்ட:' (அறம் இழக்கப்பட்டது) என்ற பொருளிலும் அமைந்துள்ளதே" என்று எல்லோரும் வியந்தனர்; (அவரது பிரிவால்) வருந்தினர்:"
சரி. தீர்லப்தா. தர்மோநஷ்ட:. இந்த இரண்டு கடபயாதி ஸங்க்யைச் சொற்களை எப்படி வருடங்களாகப் புரிந்துகொள்வது??
கடபயாதி ஸங்க்யை விளக்கத்துடன் துல்லியமாக விடை அளிக்கின்றார் அண்மைக் காலத்தில் வாழ்ந்து பரமபதம் சென்ற ஸ்ரீவைணவப் பெரியோரான ஸ்ரீ புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்!
ஸ்ரீ இராமானுசரின் அவதாரம் மற்றும் பரமபதம் குறித்த கடபயாதி ஸங்க்யை விளக்கம்:
இன்னுமொரு எடுத்துக்காட்டு ஸ்ரீ பொய்கை ஆழ்வாரின் அவதாரம் குறித்த கடபயாதி ஸங்க்யை - இது துவாபர யுகம் வரை செல்கின்றது!
நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மை மிகவும் வியக்கத்தக்கது!!
No comments:
Post a Comment