Search This Blog

Monday, 26 November 2018

00. ஸ்ரீ இராமானுசர் தரிசன ஆசாரியர்கள் அருளிய உரைகளின் ஏற்றம் - பொருளுரை


முன்னுரை


ஒவ்வொரு ஸ்ரீவைணவ ஆசாரியரின்

மென்மையானதும் அழகியதுமான அத்தூய திருவுள்ளம்,

மதிநுட்பத்துடன் கூடியதும் உயர்ந்ததும் ஆழ்ந்ததும் பரந்ததுமானத் தெளிந்த சிந்தனைத்திறன்,

தூய்மையும் கம்பீரமும் நிறைந்த அத்தூய திருவாக்கு

இவற்றை எல்லாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது! முடியாது!

திருமகள் கேள்வன் மற்றும் ஆழ்வார்களின் நேரடியான அருளைப் பெற்றவர்களும்

ஸ்ரீவைணவர்களின் குலபதியாம் நம்மாழ்வார் திருவருளால் அனைத்துப் பாசுரங்களையும் அவற்றின் உண்மைப் பொருள்களையும் அறிந்தவர்களும்

ஆகிய இந்த மகான்களின் உரைகளின் பெருமையை ஓரளவு உணர்ந்தாலும் அப்பேரின்ப அனுபவமே தனி!

அந்த உரைகளிலிருந்து சில அமுதத் துளிகளைத் தொண்டர்க்கு அமுதுண்ண சொல்மாலையாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அடியேனுக்கு நான்காயிரம் பாசுரங்களில் வெகு சிலவற்றைத் தான் மனப்பாடமாகத் தெரியும்! இப்பொழுது தங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போவது அனைத்தும் சில கட்டுரைகளில் / நூல்களில் படித்தோ அல்லது உபன்யாசங்களில் கேட்டோ ‘அட! இதில் இவ்வளவு பொருளாழம் உள்ளதா!’ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தவை. அடியேனை ஸ்ரீவைணவ ஆசாரியர்கள்பால் மேலும் ஈர்த்தவை.

தங்களுக்கும் அதே இன்பத்தைப் பயக்குமா என்று தெரியவில்லை. “லோகோ பின்ன ருசி:” - உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். இருப்பினும் மதுரமான பண்டங்களைத் தனியே உண்ணல் ஆகாது. அதனால் பகிர்ந்துகொள்கின்றேன்.

நற்றமனைத்தும் அடியேனின் கம்பீரமான ஆசாரியர்களையே சாரும். குற்றமனைத்தும் அடியேனுடையவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.




பொருளுரை


எண் ஆழ்வார், அருளிச்செயல் உரை அருளிய ஸ்ரீவைணவ ஆசாரியர்
1 பெரியாழ்வார்  
1.1     திருப்பல்லாண்டு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
2 தொண்டரடிப்பொடியாழ்வார்  
2.1     திருப்பள்ளியெழுச்சி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
2.2     திருமாலை ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
3 ஆண்டாள்  
3.1     திருப்பாவை ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
4 குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி) ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
5 திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான்) ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
6 மதுரகவியாழ்வார் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
6.1    முன்னுரை
6.2    ஸ்ரீ மதுரகவிகள்
6.3    ஸ்ரீமந் நாதமுனிகள் மற்றும் ஸ்ரீ பவிஷ்யதாசாரியர்
6.4    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
6.5    பாசுரங்களுக்கு ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் அருளிய பொருளமுதம்
6.6    அருளிச்செயல்களில் கண்ணிநுண் சிறுத்தாம்பின் நிலை
6.7    தனியன்களுக்கு ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் அருளிய பொருளமுதம்
7 திருமங்கையாழ்வார்  
7.1     பெரிய திருமொழி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
7.2     சிறிய திருமடல் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
8 முதலாழ்வார்கள் மற்றும் திருமழிசைப்பிரான்  
8.1     முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள் & நான்முகன் திருவந்தாதி ஸ்ரீ நம்பிள்ளை
9 நம்மாழ்வார் (திருவாய்மொழி) ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஈடு 36000)
9.1    ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளையின் சிறப்பும் ஈடு 36000 படி என்ற உரை பிறந்த வரலாறும்
9.2    ஸ்ரீ இராமாநுசரின் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குவோம்!
9.3    விசிட்டாத்துவைதம் - ஒரு சிறு அறிமுகம்
9.4    சில பாசுரங்களுக்கு ஈடு உரையில் விளக்கங்கள்




No comments:

Post a Comment